Breaking News
Home / latest-update / நம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை

நம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை

வெற்றி என்பது யாரிடம் உள்ளது
உன்னை நம்பினால் வெற்றி உனது

துணிந்து வாடா மோதி பார்ப்போம்
வெடியாய் மாறி மலையை உடைப்போம்
தேடிச் சென்றால் ஏது எல்லை?
எழுந்து நின்றால் வானம் தூரமில்லை!

இன்று எனக்கு நாளை உனக்கு
இதான் இங்கு வாழ்க்கை கணக்கு

வெளிச்சமிங்கு இருக்கும் வரைதான்
தன் நிழல் கூட துணைக்கு வரும்
மனதில் இருள் சூழ்ந்து விட்டால்
வாழ்க்கை இங்கு நரகமாகும்!

வெற்றி என்பது யாரிடம் உள்ளது
உன்னை நம்பினால் வெற்றி உனது

துணிந்து வாட மோதி பார்ப்போம்
உளியைக்கொண்டு சிலைகள் வடிப்போம்
பூமி மட்டும் சுழல்வதில்லை.
நாம் சும்மா கிடக்கலாகுமோ – அதுக்குள்ளே?

இறங்கி வாடா கடலுக்குள்ளே
மூச்சு பிடித்து மூழ்கி பார்ப்போம்
கை துடுப்பு கொண்டு நீந்தி பார்ப்போம்
கடலைக் கொஞ்சம் கடந்து பார்ப்போம்
சாதனை பதக்கம் எந்நாளும் சேர்ப்போம்!

உனக்குள் இருக்கும் எண்ணக் கனவை
அக்னிக் குஞ்சாய் பறக்கவிடு
உனக்குள் விளைந்த நல்ல (க)விதையை
உலகமெங்கும் விதைத்துவிடு

நிரந்தரமானது எதுவுமில்லை
காற்றுக்குதான் ஏது எல்லை?
ஒவ்வொரு முறையும் போராடி பாரு
தோற்றாலும் உண்டு வரலாறு

முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
முயலாமை இருந்தால்
அப்படை இங்கு
எப்படி வெல்லும்?

மதி மட்டும் கொஞ்சம் உனக்குள் இருந்தால்
விதியை தானே மாற்றலாம்
முயற்சி மேலே முயற்சி செய்தால்
வெற்றிவாகை சூடலாம்…!

Check Also

மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (11) காலை 11 மணியளவில் …