Breaking News
Home / யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

யாழில் திடீரென வெட்டி அகற்றப்படும் ரயில் பெட்டிகள்!

யாழ்ப்பாணம் காங்­கே­சன்­துறை பகு­தி­யில் கைவி­டப்­பட்ட நிலை­யி­லி­ருந்த தொட­ருந்­துப் பெட்­டி­கள் இரும்­புக்­காக வெட்டி அகற்­றப்­ப­டு­கி­றது. போர் கார­ண­மாக தொட­ருந்து சேவை­கள் நிறுத்­தப்­பட்ட காலத்­தில் காங்­கே­சன்­துறை தொட­ருந்து நிலை­யத்­தில் ஒரு தொகைப் பெட்­டி­கள் கைவி­டப்­பட்ட நிலை­யில் இருந்­தன.நீதி­மன்­றின் ஊடாக ஏலத்­தில் விடப்­பட்டு இரும்பு வியா­பாரி ஒரு­வர் அதனை பொறுப்­பேற்­றுள்­ளார். அவரே அதனை வெட்டி அகற்­றும் பணி­களை முன்­னெ­டுத்­துள்­ளார்.

Read More »

தங்­கை­யை தாக்­கி­ய­வரை தடுத்த -அக்­கா­வுக்கு வெட்டு

தங்கை மீதான தாக்­கு­தல் முயற்­சி­யைத் தடுக்க முயன்ற அக்கா வாள்­வெட்­டுக்கு இலக்­கா­னார். அவர் வயிற்­றி­லும் கையி­லும் காய­ம­டைந்­தார். அவர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். இந்­தச் சம்­ப­வம் நேற்று மிரு­சு­வில், தவ­சிக்­கு­ளத்­தில் நடந்­துள்­ளது.இவ­ரது தங்­கைக்­கும் அயல் வீட்­டி­ன­ருக்­கும் நேற்­று­முன்­தி­னம் வாய்த்­தர்க்­கம் ஏற்­பட்­டுள்­ளது. அயல்­வீட்­டைச் சேர்ந்த 16 வய­துச் சிறு­வன் பெண்ணை வாள் கொண்டு அச்­சு­றுத்­தித் துரத்­தி­யுள்­ளார். அது தொடர்­பாக கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யத்­தில் …

Read More »

காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குழுவொன்றின் மீது இவ்வாறு காட்டு யானை தாக்கியுள்ளது. மதவாச்சி, பூனேவ, கிடவரங்குளம் பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 42 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் …

Read More »

யாழிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பேருந்தில் பொலிசாரிடம் சிக்கிய நபர்கள்!

வவுனியா தாண்டிக்குளம் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கிலோ 634 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேரூந்தை நிறுத்தி சோதனையிட்ட போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மாத்தளை – கலுதாவல மற்றும் கிளிநொச்சி – பாரதிபுரம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

நடந்து சென்றவரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள்…!!ஸ்தலத்தில் இளைஞன் பலி….!! புத்தூரில் சோகம்….!

புத்தூர் மீசாலை பிரதான வீதியில் நேற்று இரவு 9:00 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.புத்தூர் மீசாலை வீதியில் நடந்து சென்ற இளைஞன் மீது மதுபோதையில் மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்தவர் பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் புத்தூர் ஊறனி பகுதியினை  சேர்ந்த இரத்தினம் மோகன் வயது(28) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார் . அத்துடன் மோட்டார் …

Read More »

யாழ் நகரில் திடீர் சோதனை….. திக்குமுக்காடிப் போன வாகனச் சாரதிகள்…..!!

யாழ்ப்பாணத்தில் இன்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும், பொலிஸாரும் இணைந்து வாகனங்களுக்குப் புகைப் பரிசோதனையும், தரப் பரிசோதனையும் மேற்கொண்டனர்.யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயில் முன்பாக வீதிகளில் பயணித்த வாகனங்கள் மறிக்கப்பட்டுச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புகைப் பரிசோதனையில் தோல்வியடைந்த வாகனங்களும், தரம் குறைந்த வாகனங்களும் அவற்றைச் சீர் செய்யக் கால அவகாசம் வழங்கப்பட்டது. சாரதிகளின் சாரதி அனுமதிப் பத்திரம் பொலிஸாரால் பெறப்பட்டு அவர்களுக்கு தண்டப் பத்திரம் வழங்கப்பட்டது. முச்சக்கர வண்டிகளும் தரச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. …

Read More »

யாழில் வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர எந்நேரமும் களமிறங்க தயார் நிலையில் இராணுவம்….!!

ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம். நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கும் போது; நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு என்பன பொலிஸாரிடம் உள்ளன. அதனால் அவற்றில் நாம் தலையிடுவதில்லை.யாழில் உள்ள …

Read More »

இன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..!!

முல்லைத்தீவு  மாவட்ட மாணவர்களே “Anchor Students with Talent” பிரம்மாண்ட போட்டிக்களம் யாழ் மாவட்டத்தில் முதற்கட்ட தேர்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து உங்கள் இசை, நடன, தொழிநுட்பத் திறன்களுக்காகவும் களம் கொடுக்க நாங்கள் தயார்..எதிர்வரும் 23ம் திகதி முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை (Convent)  காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் போட்டி நிகழ்ச்சிகளில் உங்கள்  இசை, நடன, தொழிநுட்பத்துறை சார் திறன்களை வெளிப்படுத்த போட்டி விதிமுறைகளுக்கமைவாக தயாராகுங்கள். “Anchor Students …

Read More »

கத்தி முனையில் 17 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

ஏ9 பிரதான வீதியின் சாவகச்சேரி நகரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து இன்று (19) காலை 8.30 மணிக்கு சுமார் 17 இலட்சம் ரூபா பணம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று காலை வழமை போல் நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள், பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர். இதன்போது கத்தியோடு உள்நுழைந்த திருடன் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளான். சந்தேகநபர் முகத்தை …

Read More »

மாதா சொரூபத்திலிருந்து வடியும் இரத்தக் கண்ணீர்……..!! பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம்…..!! யாழில் பரபரப்பு….!!

மாதா சொரூபத்தின் கண்களில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிந்து கொண்டிருப்தாக தெரிவிக்கப்படுகின்றது.ஊர்காவற்துறை சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்திலேயே இவ்வாறு இரத்தக் கண்ணீர் வெளிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பகுதிக்கு சம்பவத்தைப் பார்வையிடுவதற்காக பெருமளவான மக்கள் பார்வையிடுவதற்காக செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »