Breaking News
Home / latest-update / விபத்துக்குள்ளான பிரதமர் மோடியின் மனைவி என்ன ஆனார்?

விபத்துக்குள்ளான பிரதமர் மோடியின் மனைவி என்ன ஆனார்?

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் அருகே பிரதமர் மோடியின் மனைவி ஜஷோதா பென் நேற்று இன்னோவா காரில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது டிரக்குடன் மோதிய விபத்தில் ஜஷோதா பென் காயம் அடைந்தார்.gfj

பாராவில் உள்ள அட்ரு என்ற இடத்தில் இருந்து உதய்பூர் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேற்று காலை 10 மணிக்கு ஏற்பட்டது. டிரக் ஓட்டுநர் பிரேக் போட்டத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

கார் டிரைவர் பசந்த் அதே இடத்தில் பலியானார். காயம் அடைந்த மோடியின் மனைவி, மேலும் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு கமாண்டோ ஒருவர் உடனடியாக அருகில் இருக்கும் சித்தோர்கர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.




ஜசோதாபென்னுக்கு லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கமாண்டோ வீரர் ஆபத்தான கட்டடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …

One comment

  1. We are the most transparent Seo enterprise in London.

Leave a Reply

Your email address will not be published.