Breaking News
Home / latest-update / யாழ் ஆவரங்காலில் வீதியால் சென்ற இளைஞன் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டான்!!

யாழ் ஆவரங்காலில் வீதியால் சென்ற இளைஞன் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டான்!!

யாழ்ப்பாணம், ஆவரங்கால் சர்வோதயா வீதியால் நடத்து சென்றுகொண்டிருந்த இளைஞன் மீது இனந்தெரியாதோர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் குறித்த இளைஞன் படுகாயம் அடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

நேற்று நண்பகல் வீதியால் நடத்து சென்றுகொண்டிருந்த இளைஞன் மீது உந்துருளியில் வந்த இருவர் கழுத்தில் சரமாரியாகக் குத்தினர்.

கத்தியால் குத்தியபோது கத்தியானது குறித்த இளைஞனின் உடலில் அரைவாசி ஏறிய நிலையில் முறிவடைந்து, குறித்த இளைஞன் வீதியில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தார்.

இதனையடுத்து வீதியால் சென்ற சில இளைஞர்கள் குறித்த இளைஞனை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

குறித்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், கத்திக்குத்துத் தாக்குதல் இடம்பெற்றதற்கான காரணம் தெரியவரவில்லையெனவும், காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது.

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …

Leave a Reply

Your email address will not be published.