Breaking News
Home / latest-update / மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி

மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி

மட்டக்களப்பு – நாவற்குடாவில் உள்ள விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு ஆரம்பமாகியது.
கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்  எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், இணைத்தலைவர் ரி. வசந்தராஜா உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் போன்றோர் எழுச்சியுரைகளை ஆற்றியுள்ளனர்.
காலம் காலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் இணைந்த வடகிழக்கே தமிழர்களின் தாயகம் என்பதையும் சமஸ்டியின் மூலமே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை காணமுடியும் என்பதையும் தமிழ் மக்கள் சார்பில் வலியுறுத்தி கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுக தமிழ் பேரணியில் வடக்கு முதல்வர்.
கிழக்கு மாகாண எழுக தமிழ் பேரணியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்துகொண்டுள்ளார்.
எழுக தமிழ் பேரணியில் காணாமல் போன உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளில் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
“சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை திணிக்க வேண்டாம்“ “விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய்…“ “ நிறுத்து நிறுத்து பயங்கர வாத தடை சட்டத்தை திறுத்து“ போன்ற கோசங்களை எழுப்பியவாறு பேரணியில் மக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …

Leave a Reply

Your email address will not be published.