Breaking News
Home / latest-update / இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது – இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்

இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது – இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்

22 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் – ‌ஷங்கர் இருவரும் ‘இந்தியன் 2’ படத்துக்காக மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. பூஜையின் போது கமல்ஹாசன், தான் நடித்த இந்தியன் தாத்தா (சேனாபதி) கதாபாத்திரமாகவே பங்கேற்றுள்ளார்.
இயக்குநர் ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினரும் பூஜையில் பங்கேற்றுள்ளனர். சென்னையின் புறநகர் பகுதியில் பிரம்மாண்ட அரங்குகளுடன் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. தொடர்ந்து பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. உக்ரைனில் முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
முன்னதாக சமீபத்தில் வெளியாகிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்தியன் முதல் பாகம் முடிவில் 80 வயது முதியவராக வரும் கமல்ஹாசன் விபத்தில் சிக்கி மாயமாவது போன்றும், வெளிநாட்டில் இருந்து அவர் போன் செய்வது போன்றும் முடித்து இருந்தனர். #Indian2 #KamalHaasan #Shankar #KajalAggarwal

Check Also

பாலியல் உறவு – சரியான வயது என்ன?

சீக்கிரமாகவே கன்னித்தன்மையை இழந்துவிடுவது பிரிட்டிஷின் இளம் வயதினரின் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் மக்களின் பாலியல் நடத்தை குறித்த …