Breaking News
Home / latest-update / ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக பொருந்திக்கொள்ளும். ஏனெனில் இவை ஸ்மார்ட்போன்கள் எனச் சொல்லப்படும் திறன்பேசிகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.

எதிர்கால காலணிகளுக்கான சமீபத்திய உருவாக்கம் இது. இம்மாதிரியான ஷூக்கள் முதலில் பேக் டு ஃபியூச்சர் -2 திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டன. இத்திரைப்படம் 1989-ல் வெளிவந்தது. 2016-ல் நைக் நிறுவனம் இதைச் செயல்படுத்தியது.

சமீபத்திய பதிப்பில், நைக் அடாப்ட் என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த காலணியின் விலை 350 டாலர்கள். இதற்கு காலணிகளை கட்டும் நாடா கிடையாது. இந்த அறிமுக நிகழ்ச்சி ட்விட்ச் எனும் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பானது.

´´ நாங்கள் நைக் அடாப்ட் ஷூவை தயாரிப்பதற்கு கூடைப்பந்தாட்டத்தை கவனத்தில் கொண்டு பிரத்யேகமாக தயாரித்தோம்´´ என்றார் அந்நிறுவனத்தின் படைப்பாற்றலுக்கான புத்தாக்க இயக்குநர் எரிக் அவார்.

´´பொதுவாக ஒரு சாதாரண கூடைப்பந்தாட்டத்தின் போது, வீரரனின் பாதத்துக்கு நிறைய வேலைஇருக்கும். வேகமாகச் செயல்பட்டு அக்காலணி சற்று தளர்வடைந்து மீண்டும் பாதத்துக்கு ஏற்ற வகையில் சிறப்பாக பொருந்திக்கொண்டால், பாதங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் வீரரின் செயல்திறன் மேம்பட இது ஒரு முக்கிய பங்காற்றும்´´ என்கிறார் எரிக்.

காலணி எந்த அளவுக்கு பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதை நீங்களே செட்டிங்குகளில் மாற்றிக்கொள்ளலாம். ஒரு திறன் பேசி மூலம் நீங்கள் உங்கள் ஷூவை கட்டுப்படுத்த முடியும். ஆட்டத்தின் எந்த பகுதியில் காலணியில் எத்தகைய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து உங்கள் திறன்பேசியில் மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக ஆட்டத்தில் டைம் அவுட் நேரத்தில் – அதாவது ஆட்ட இடைவேளையில் காலணியை சற்று இலகுவாக்கவும் போட்டிக்குள் மீண்டும் நுழையும்போது காலனியை மீண்டும் இறுக்கமாக பாதத்துக்கு ஏற்ற வகையில் பொருத்திக்கொள்வதற்கும் உங்கள் திறன் பேசியில் நீங்கள் செட் செய்து விடலாம்.

ஒருவர் காலணிக்குள் தனது பாதத்தை நுழைக்கும்போது காலணியில் உள்ள மோட்டார் மற்றும் கியர் அவரது பாதத்தின் அழுத்தத்தங்களை உணர்ந்து அதற்கேற்ப காலனியை சரி செய்துகொள்ளும்.

இந்த செயலி உங்களது தரவுகளையும் சேகரிக்கும் நீங்கள் விரும்பினால் நைக் நிறுவனத்துக்கு அந்த தகவல்களை அனுப்பலாம். வரும் பிப்ரவரி மாதம் இந்த காலணி சந்தைக்கு வருகிறது.

வரியபில் எனும் உடலில் அணியக்கூடிய தொழில்நுட்பம் சார்ந்த பொருள்களை பற்றிய வலைதளத்தின் ஆசிரியர் மைக்கேல் ஷா, ´´ பேக் டூ பியூச்சர் திரைப்படத்தில் பார்த்ததை நிஜத்தில் நிகழ்த்தி காட்டியிருப்பது பழமையான நினைவை அசைபோட உதவுகிறது. கடந்த வருடம் இது குறித்து நைக் ஒரு அறிவிப்பை வெளியிட்டபோதே பரபரப்பு தொற்றியது. அப்படத்தின் ரசிகர்களும், நைக் நிறுவன காலணிகள் விரும்புவோரும் இதனை தங்களது காலணி சேகரிப்பில் சேர்த்துக்கொள்வர்´´ என்றார்.

´´ நாடாவின் தேவையை நீக்கும் காலணி குறித்து நிச்சயம் விவாதம் உண்டாகும். இந்த தொழில்நுட்பத்தை மற்ற காலணிகளுக்கும் கொண்டுவரவுள்ளதாக நைக் தெரிவிக்கிறது. அப்போதுதான் இந்த வித்தைகள்.

உண்மையில் பலனளிக்கக்கூடிய ஒன்றாக அமையுமென நினைக்கிறேன்´´ என்றார் மைக்கேல். சிசிஎஸ் இன்சைட்டின் மொபைல் பகுப்பாய்வாளரான பென் வுட் பேசுகையில், ´´ நீண்டகாலமாக நாங்கள் ஸ்மார்ட் காலணிகள் வளர்ச்சி குறித்து கணித்திருந்தோம். ஒரு தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துவதற்கு ஏற்ற இடமாக காலணிகள் உள்ளன. ஆனால் காலணி தயாரிப்பாளர்களுக்கு இதன் மூலம் காலணிகள் எவ்வ்ளவு பயன்படுத்தப்படுகின்றன, செயல்திறன், அணியும் நேரம் உள்ளிட்ட பல தரவுகளை சேகரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது´´.

´´எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகமானாலும், நுகர்வோரின் தரவுகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து கவலைப்பட வேண்டியதாக இருக்கிறது. ஆனால் இதய துடிப்பு உள்ளிட்ட உடல்நலன் சார்ந்த பல தொடர்ச்சியான அளவீடுகளை மேற்கொள்ளும் ஸ்மார்ட் இயந்திரங்களை விட நைக்கின் இந்த காலணி மூலம் குறைவாகவே தரவுகள் சேகரிக்க முடியும் என்பதால் நிச்சயம் ஒப்பீட்டளவில் குறைவான கவலைகள்தான் உள்ளன´´ என்கிறார் பென்.

Check Also

பாலியல் உறவு – சரியான வயது என்ன?

சீக்கிரமாகவே கன்னித்தன்மையை இழந்துவிடுவது பிரிட்டிஷின் இளம் வயதினரின் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் மக்களின் பாலியல் நடத்தை குறித்த …