Breaking News
Home / latest-update / ஒருமுறை கூட உறவு கொண்டதில்லை: ஹிட்லர்- Eva காதல் வாழ்க்கை குறித்து வெளியான தகவல்

ஒருமுறை கூட உறவு கொண்டதில்லை: ஹிட்லர்- Eva காதல் வாழ்க்கை குறித்து வெளியான தகவல்

உலகில் ஜேர்மனியரே உயர்ந்த இனத்தினர், உலக மக்கள் அனைவரும் தனது கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும் என்பதற்காக நாஜி கட்சியை ஆரம்பித்து சர்வாதிகாரியாக வலம் வந்து வரலாற்றில் இடம்பிடித்தவர் அடால்ப் ஹிட்லர்.

அரக்க செயல்கள் புரிந்துவந்தாலும் இவரின் இரக்கமான மனதுக்குள் காதலும் இருந்துள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

கடைசி காலத்தில் ஹிட்லருடன் சேர்ந்து உயிரிழந்த Eva Braun என்பவர் தான், இவரின் காதலி என கூறப்படுகிறது.

மேலும், Geli Rauba மற்றும் Erna Hanfstaengl என்ற அழகிய பெண்களுடனும் இவருக்கு காதல் இருந்துள்ளது என கூறப்படுகிறது.

மொத்தத்தில், இவரது வாழ்வில் 3 பெண்களுக்கு இடமுண்டு. இதில் ஹிட்லரின் மனதுக்கு நெருக்கமானவர் Eva Braun. இவரை ஹிட்லரின் மனைவி என்றுதான் வரலாற்றில் கூறப்படுகிறார்.

Thomas Lundmark என்ற ஆசிரியர் Eva Braun – இன் வாழ்க்கையை ஆவணப்படமாக தயாரித்து வருகிறார். அதில், ஒரு தகவல் தெரியவந்துள்ளது. அதில், ஹிட்லரின் மனைவியான Eva ஒருமுறை கூட ஹிட்லருடன் உறவு கொள்ளவில்லை.

ஏனெனில், Gynaecology condition குறைபாட்டால் Eva பாதிக்கப்பட்டிருந்தார். அதாவது, பிறப்புறுப்பு பிரச்சனை காரணமாக அவரால் குழந்தை பெற்றுக்கொள்வது மற்றும் பாலியல் உறவில் ஈடுபட முடியாது, எனவே அவர் ஹிட்லருடன் உறவு கொள்ளவில்லை என ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஆதாரங்கள் தனக்கு கிடைத்துள்ளதாகவும், Eva அறுவை சிகிச்சை செய்துகொண்டது மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டது தொடர்பாக எடுத்துக்கொண்ட மருத்துவ சிகிச்சை ஆதாரங்களும் கிடைத்துள்ளது என ஆசிரியர் Thomas Lundmar தெரிவித்துள்ளார்.

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …