Breaking News
Home / latest-update / கடந்த 16 நாட்களில் 2000 டெங்கு நோயாளர்கள்

கடந்த 16 நாட்களில் 2000 டெங்கு நோயாளர்கள்

இந்த ஆண்டின் கடந்த 16 நாட்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலாக 625 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 499 நோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் 180 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளிகள் கூடுதலாக இனங்காணப்பட்டதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் சமூக சுகாதார சிறப்பு நிபுணர் டாக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களம்

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …