Breaking News
Home / latest-update / 119 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைக்கவிருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

119 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைக்கவிருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

புதுக்கோட்டையில் 395 குடும்ப உறுப்பினர்களுடன் 119 ஆண்டுகள் வாழ்ந்த மூதாட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) மரணம் அடைந்தார்.உலகிலேயே அதிக வயது வாழ்ந்தவர் என்ற பெருமையை 1875ஆம் ஆண்டு பிறந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிகால்மெட் என்ற பெண்மணி பெற்றுள்ளார். இவர் 1997ஆம் ஆண்டு இறந்தார். இவர் மொத்தம் 122 ஆண்டுகள் 164 நாட்கள் ஜெனிகால்மெட் வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில், புதுக்கோட்டை நல்லம்மாள் 119ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இன்னும் சில ஆண்டுகள் நல்லம்மாள் வாழ்ந்திருப்பார். ஆனால் கஜா புயலுக்கு பிறகு நல்லம்மாள் உடலில் ஏற்பட்ட மாற்றம் உலக சாதனை படைக்க முடிவில்லை அவரால்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியிலுள்ள கிராமத்தை சேர்ந்த நல்லம்மாள் 1899ஆம் ஆண்டு பிறந்தார். இவரது கணவர் அருணாச்சலம். 20 வருடங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்.இவர்களுக்கு 2 மகன்களும், 5 மகள்களும் பிறந்தனர். இவர்கள் மூலம் 22 பேரன், பேத்திகள், 45 கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள், அவர்கள் மூலம் எள்ளு பேரன், எள்ளு பேத்தி என மொத்தம் 395 பேர் இவர்கள் குடும்பத்தில் உள்ளனர்.

நல்லம்மாள் குறித்து அவரது உறவினர்கள் தெரிவிக்கும் போது;

“கடைசிவரை நல்லம்மாள் பார்க்கும் திறன், கேட்கும் திறன் ஆகியவற்றுடன் பேசும் திறனையும் பெற்றிருந்தார் என்றும். பேரன், பேத்திகள், எள்ளு பேரன், பேத்திகள் என யார் வந்தாலும் சரியாக அடையாளம் கண்டுபிடித்து பேசுவார் என தெரிவித்தனர்.வயலுக்கு தினசரி வேலைக்கு சென்று உழைத்த நல்லம்மாள் கடைசி வரை வைத்தியசாலைக்கு சென்றதில்லை. இயற்கை உணவு, இயற்கை வைத்தியம் என இயற்கையுடனேயே வாழ்ந்து மறைந்துள்ளார் என கூறினார்கள்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் முதன் முறையாக அவருக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போதும் வைத்தியசாலைக்கு செல்லவில்லை” என தெரிவித்தனர்.இந்த நிலையில் தான், நேற்று அவர் 119ஆவது வயதில் இறந்துள்ளார்.

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …