Breaking News
Home / latest-update / தொடரும் சீரற்ற காலநிலை – வட. மாகாண அரசாங்க அதிபர்களை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி

தொடரும் சீரற்ற காலநிலை – வட. மாகாண அரசாங்க அதிபர்களை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி

வட. மாகாணத்தில் நிலவி வரும் வெள்ளம் மற்றும் அடைமழை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து இன்று (திங்கட்கிழமை) ஆராயப்படவுள்ளது.

அதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கும், வடக்கு மாகாண அரசாங்க அதிபர்கள் மற்றும் வடக்கிலுள்ள அரச ஊழியர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த தகவலை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை வட.மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 54,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 11,299 பேர் இடம்பெயர்ந்து 38 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கிளிநொச்சி ,முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களே வெள்ளத்தினால் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதோடு, வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதையடுத்து, வான் கதவுகள் மூடப்பட்டுள்ளன.

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …