Breaking News
Home / latest-update / ஜன சந்தடிமிக்க நேரத்தில் பட்டப்பகலில் வாகனத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்….யாழில் இன்று நடந்த பயங்கரம்….!!

ஜன சந்தடிமிக்க நேரத்தில் பட்டப்பகலில் வாகனத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்….யாழில் இன்று நடந்த பயங்கரம்….!!

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்பஸ்தரொருவரை கடத்திய நால்வர் பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நைய புடைக்கப்பட்டு பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கினை சேர்ந்த சி.நமசிவாயம் (வயது 60) என்பவரையே இன்று கடத்த முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.கார் மற்றும் தளபாடங்கள் விற்பனை செய்யும் வாகனம் ஒன்றில் வந்த 7 பேர் கொண்ட குழுவே குடும்பஸ்தரை கடத்த முற்பட்டுள்ளனர்.இந்தக் கடத்தலை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடத்தல் குழுவினரை சுமார் 10 கிலோமீற்றர் தூரம் துரத்தி சென்று இயக்கச்சி வளைவு பகுதியில் வைத்து மடக்கி பிடித்து நைய புடைத்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, குழுவினரால் கடத்தப்பட்டவர் தமக்கு பல லட்சம் ரூபா பணம் கொடுக்க வேண்டும் எனவும், அதனாலேயே அவரை தாம் கடத்தியதாகவும் கடத்தல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த குழுவில் இருந்து தப்பி சென்ற மூவரையும் தேடுவதற்கு பொதுமக்களின் உதவிகளை பொலிஸார் நாடியுள்ளனர்.இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …