Breaking News
Home / latest-update / என்ன நடந்தது – உண்மையில் அகற்றப்பட்டதா ஜெயலலிதா கால்கள் ?

என்ன நடந்தது – உண்மையில் அகற்றப்பட்டதா ஜெயலலிதா கால்கள் ?

சிகிச்சையின் போது ஜெயலலிதாவுக்கு கால்கள் அகற்றப்படவில்லை என்றும், ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்று வெளியான வீடியோ உண்மையானது தான் என்றும் அப்பல்லோ மருத்துவர், ஆணையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

“ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு பெரும்பாலான நாட்கள் சிகிச்சை அளித்த தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் பாபு ஆபிரகாம் மற்றும் மருத்துவர் பாலபிரகாஷ் ஆகியோர் நேற்று விசாரணைக்காக ஆஜராகினர்.

இந்த விசாரணையின் போது, ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ மருத்துவர் பாபு ஆபிரகாமிற்கு போட்டு காண்பிக்கப்பட்டது. முடிவில் அவர், ´இந்த வீடியோ உண்மையானது. அப்பல்லோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டது தான்´ என்று தெரிவித்தார். இதை நீதிபதி பதிவு செய்துகொண்டார்.

மேலும் அவர் தனது வாக்குமூலத்தில், ´சிகிச்சையின் போது ஜெயலலிதாவுக்கு 2 கால்களும் நன்றாகவே இருந்தது. அவரது கால்கள் அகற்றப்படவில்லை. ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்காக அழைத்துச் செல்வது தொடர்பான விவகாரத்தில் சசிகலாவால் எந்த தடையும் ஏற்படவில்லை. சிகிச்சையின் போது ஒரு நாள் சுமார் 1 மணி நேரம் ஜெயலலிதா என்னிடம் பேசினார்.” என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Check Also

மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (11) காலை 11 மணியளவில் …