Breaking News
Home / latest-update / பேஸ்புக் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி! 3 கோடி பயனாளர்கள் சிக்கலில்

பேஸ்புக் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி! 3 கோடி பயனாளர்கள் சிக்கலில்

3 கோடி, பேஸ்புக் பயனாளர்களின் இரகசிய தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.பயனாளர்களின் பிறந்த திகதி, கல்வி உள்ளிட்ட பிற தகவல்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், 1.5 கோடி நபர்களின் மேலும் பல தகவல்களையும் ஹேக்கர்கள் திருடியுள்ளதாகவும், 1.4 கோடி மக்களுடைய பெயர்கள் மற்றும் தொடர்பு விபரங்களை திருட ஹேக்கர்கள் முயற்சித்துள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் பேஸ்புக் தொழில்நுட்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை அந்நிறுவனம் சரிசெய்து வரும் நிலையில், மீண்டும் 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …