Breaking News
Home / latest-update / கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சுழிபுரம் மாணவியின் இறுதிக் கிரியைகள்

கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சுழிபுரம் மாணவியின் இறுதிக் கிரியைகள்

சுழிபுரம், காட்டுப்புலத்தைச் சேர்ந்த மாணவி சிவநேஸ்வரன் றெஜினா, கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் இறுதிக் கிரியைகள் நேற்று (26) மாலை இடம்பெற்றது. யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

அவரது வீட்டில் இடம்பெற்ற வணக்க வழிபாடுகளைத் தொடர்ந்து சடலம் சுழிபுரம், திருவடிநிலை மயானத்தில் புதைக்கப்பட்டது.

இறுதிக் கிரியைகளில் பிரதேச மக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 

Check Also

ஷூவை இலகுவாக்க ஸ்மார்ட்போன்கள்

நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக …