Breaking News
Home / கவிதைகள்

கவிதைகள்

நீ போதும் | கவிதை

கவிப்பாடும் மன்னனுக்கு, கவிச்சொல்லும் காதல் சொல்லவா? நிழலான உந்தன் கவியை, நிஜமாக நானும் தீட்டவா? அலையாக நானும் கரையேற வேண்டும்… அலையாக நீயும், நானும் கரையேற வேண்டும்…. பனிப்பொழிவு வருகிறபோது நெருப்புக்கும் குளிருமா? தோட்டத்து பூக்கள்கூட அனலில்தான் மலருமா? கண்ணா நான் இளங்கன்னி, தேய்கிறேனே உன்னை எண்ணி, எனை பார்த்து ஒரு வார்த்தை சொல்லிவிடு. எனக்கே எனக்கென்று உனை அள்ளிக் கொடு. கண்ணா உன் துறுதுறுக் கண்கள் என்னைதான் ரசிக்கிறதா? …

Read More »

அழகு | கவிதை

துள்ளி விளையாடும் புலிக்குட்டி அழகு🐅🐯 அது சீறிப் பாய்ந்து தாக்கும் வரை 🐯 சிங்கத்தின் பிடரி அழகு🦁அது நம்மை குதறி அழிக்கும் வரை🦁 படமெடுத்தாடும் பாம்பழகு🐍 அது நம்மை தீண்டும் வரை🐉 எரியும் விளக்கின் ஜோதி அழகு🔥 அது தொட்டு நம்மை சுடும் வரை🔥 அலையடிக்கும் கடல் அழகு🌈 அது சுனாமியாக சுருட்டும் வரை❄ கடனும் கூட வாழ்விற்கழகு👑 அது திருப்பி கேட்கப் படாத வரை❄ கள்ளும் கூட பாலின் …

Read More »

நம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை

வெற்றி என்பது யாரிடம் உள்ளது உன்னை நம்பினால் வெற்றி உனது துணிந்து வாடா மோதி பார்ப்போம் வெடியாய் மாறி மலையை உடைப்போம் தேடிச் சென்றால் ஏது எல்லை? எழுந்து நின்றால் வானம் தூரமில்லை! இன்று எனக்கு நாளை உனக்கு இதான் இங்கு வாழ்க்கை கணக்கு வெளிச்சமிங்கு இருக்கும் வரைதான் தன் நிழல் கூட துணைக்கு வரும் மனதில் இருள் சூழ்ந்து விட்டால் வாழ்க்கை இங்கு நரகமாகும்! வெற்றி என்பது யாரிடம் …

Read More »

நீ – நான் | காதல் கவிதை

கவிதை ஒன்று கேட்டால் என் பெயர் சொல்லும் முட்டாள் கவிஞன் நீ!! முத்தங்கள் கேட்டால் கன்னங்களைக் கடிக்கும் வளர்ந்த குழந்தை நான்!! ஆசைகளை மறைத்துக்கொண்டு அரிஸ்டாட்டில் பேசும் அறிவுக்களஞ்சியம் நீ!! அனைத்தும் அறிந்திருந்தும் உன் பேச்சுக்கு தலையசைக்கும் தஞ்சை பொம்மை நான்!! உரசலும் தீண்டலும் கேட்காமலே அள்ளிக்கொடுக்கும் கலியுகக் கர்ணன் நீ!! சீண்டல்கள் பிடித்தாலும் கோபப் பார்வை வீசும் குடும்பக் குத்துவிளக்கு நான்!! காதலை நெஞ்சில் சுமந்து கனவுகளைக் கண்ணில் …

Read More »

சுமையில்லா வாழ்வில் சுகமில்லை – வாழ்க்கை கவிதை

பனி சுமந்த புற்களுக்கு களைப்பில்லை கனி சுமந்த கிளைகளுக்கு வலியில்லை ஓயாமல் சிமிட்டுவதால் இமைகள் தேய்வதில்லை சாயாமல் நிற்பதால் மரங்கள் சலிப்பதில்லை இடி விழுந்து பூமி உடைவதில்லை மின்னல் வெட்டி வானம் கிழிவதில்லை சுற்றுவதால் பூமிக்கு தலை சுற்றவில்லை துடிப்பதால் இதயத்திற்கு சோகமில்லை விழுவதால் மழைத்துளிக்கு காயமில்லை அழுவதால் பிறந்தசிசுக்கு நோவுமில்லை காயாத மலரில்லை தேயாமல் நிலவில்லை கொய்யாத மலர்கள் மாலையாவதில்லை நெய்யாத நூல் சேலையாவதில்லை தோல்விகள் என்றும் நிரந்தரமில்லை …

Read More »

தேவதையின் வரவால் – காதல் கவிதை

அன்பால் வென்றாய், கல்லையும் கரைத்தாய், எனக்காக பிறந்தவள் இவள்தானோ என்று என்னையே எண்ணவைத்தாய், என் தாடிக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம் தெரிந்தும் ஏன் பெண்ணே என்னை தேடி வந்தாய், என் யன்னலில் செடியை வைத்து காதலை வளர்தாய், இதுவரை நான் கண்ட வண்ணமில்லா கனவுகள் முடிந்ததே, முட்கள் நிறைந்த பாதைகள் பூக்களாய் மாறி சுமைக்கின்றதே, தனித்தீவில் தனியாக இருந்தேன், நீ வந்து சிறகுதந்தாய், வாழ்க்கை வானையும் தாண்டி செல்கிறதே.    

Read More »

காதல் கரம் தருவாயா……? – கவிதை

விழிகளிலே வினா விடுப்பவளே…. விடை மட்டும் கூறாமல் என்னை வாட்டி எடுப்பவளே…. உன்னால் இரவெல்லாம் விழிக்கிறேன்…. விடை தேடியே விடியும் வரை தூங்காமல் கிடக்கிறேன்… காதல் ரணம் தந்து செல்பவளே….. கொஞ்சம் நில்… காரணம் சொல்….. நீ என்னை கடந்து சென்றாலும் என்னுடனே வரும் நிழலாய் உன் நினைவுகள் மட்டும் ஏன் என்னை தொடர்கின்றன….? தொல்லை தருகின்றன….? அடியோடு என்னை வெறுப்பது போல் நடிப்பவளே ….அறிவாயா…..? உன்னை நொடிப்பொழுதும் நினைக்க …

Read More »

நமக்கெதற்கு முட்டாள்தினம் – வாழ்க்கை கவிதை

பருவக் கிளர்ச்சியில் எழுகின்ற ஆர்வக்கோளாறை காதலெனக் கணித்துத் தேன் கனவுகளில் மிதந்து தெய்வீகம் வளர்த்து திரிகின்ற போதில் தேவதை பறவை திருமண சிறகடித்துப் பறந்துவிடும் நாளில் கிடைத்துவிடுகிறது வாழ்வின் முதல் முட்டாள் தினம். படிக்கின்றக் காலத்தில் படிக்கக் கூடாததுகளைப் படித்து படிக்கவேண்டியதை மறந்துவிட்டு பரீட்சை மண்டபத்தில் பக்கத்து ஆசனக்காரனைப் பார்த்தெழுதியும் பெறுபேறுகளில் முட்டைவாங்குகையில் கிரீடம் அணிவிக்கிறது அடுத்ததாய் ஒரு முட்டாள் தினம். வளர்த்துக்கொண்ட தகுதிகளை வைத்துக்கொண்டு விண்ணப்பங்களை எழுதிக் குவித்து …

Read More »

உறைய வைத்தவள் நீ – காதல் கவிதை

மனசை குளிர்விக்கும் மழையில் ஒற்றை குடை பிடித்து ஓரமாய் காத்திருக்கும் பூங்கொத்து அவள்! தூறல்கள் அவள் மேல் படும் போது ஏனோ என்னை அறியாமல் என் ஜீவன் துள்ளிக்குதிக்கிறது! வீசும் தென்றல் காற்று கூட மெல்லாமாய் அவள் கன்னங்களை தீண்டி செல்கிறது! பார்க்கும் என் நெஞ்சோ பனிக்காற்றாய் உறைந்து போகிறது!

Read More »