Breaking News
Home / யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

யாழ்.மக்களுக்கு ஓர் மிகவும் மகிழ்ச்சியான செய்தி…….!! இரணைமடு நீர் விரைவில் யாழ்ப்பாணத்திற்கு ……!! வடக்கு ஆளுனர் அதிரடி நடவடிக்கை..!

இரணைமடுவிலிருந்து வீணாகும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான திட்டமுன்மொழிவை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இரணைமடு நீர்த்தேக்கம் மற்றும் நீர்த்தேக்க செயற்திட்ட அலுவலகத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு நிலைமைகளை ஆரய்ந்துள்ளார். இதன்போது, தற்போது இரணைமடு நீர்த்தேக்கத்தின் 40 வீதமான நீர் மட்டுமே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதுடன், 60 வீதமான …

Read More »

18 வயது இளைஞனுடன் குளம் பார்ப்பதற்கு சென்ற 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!! மல்லாவியில் பரபரப்பு..!

11 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவனை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் மன்று உத்தரவிட்டுள்ளது.மல்லாவிப் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 11 வயதுச் சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 18 வயதுடைய சிறுவன் மல்லாவிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதை அடுத்து சிறுவன் கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்ட சிறுவன் மல்லாவிப் …

Read More »

மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாய் பலி!

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, கரும்புள்ளியான் பகுதியில் மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை 5.30 மனியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட கரும்புள்ளியான் கிராமத்தில் வாய்க்காலிலிருந்து நீர் இறைக்கும் மோட்டர் மூலம் நீர் இரைத்துக் கொண்டிருந்த போதே அங்கு ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக அதில் சிக்கி குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் போது கரும்புள்ளியான் பகுதியை சேர்ந்த 46 …

Read More »

கடும் குளிரினால் உறைந்து போகும் யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகள்!

நாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரவு மற்றும் காலை நேரங்களில் கடும் குளிரான காலநிலை நிலவுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய மாவட்டங்களில் வழமையை விடவும் அதிகளவான குளிரான காலநிலை நிலவுகிறது. இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின பல பகுதிகளில் அதிகாலை நேரங்களில் உறைபனி விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக திணைக்கள அதிகாரி …

Read More »

விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது

இணுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தைப்பொங்கல் தினத்தன்று இணுவில் 7 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த விபத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தரும் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விபத்துச் சம்பவத்தின் பின்னர், …

Read More »

தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…!! யாழில் சோகம்…!

தனக்கு தானே தீ மூட்டினார் என எரிகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம், தாவடி தெற்கை சேர்ந்த வீரசிங்கம் கனகதுரை (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபர் பிள்ளைகள் இன்றி தனியாக வசித்து வந்ததாகவும், அந்நிலையில் நேற்று புதன்கிழமை தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார் எனவும், அதனை அவதானித்த தாம் தீயினை அணைத்து வயோதிபரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்ததாகவும் …

Read More »

வடக்கிலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிப்பேன்..!! வடக்கின் புதிய ஆளுனர் சூளுரை…!!

வட மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் என புதிய ஆளுநர் சுரேன் ராகவன் வாக்குறுதி வழங்கியுள்ளார்.வடக்கில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பதவியேற்றதன் பின்னர் சர்வமத தலைவர்களை சந்தித்து வருகிறார். அவர், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி விமல தேரர் மற்றும் நயினாதீவு நாக விகாரையின் விகாராதிபதி நமதகல சத்மகீத்தி திஸ்ஸ தேரரையும் சந்தித்துள்ளார். இதன்போது, வடக்கு மாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் …

Read More »

யாழ் இணுவிலில் கோர விபத்து…!! 12 வயதுச் சிறுவன் பரிதாபமாகப் பலி…!! மேலும் நால்வர் படுகாயம்….!!

யாழ்ப்பாணம் இணுவில் 7 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு  இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.முச்சக்கரவண்டி ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பயணித்துள்ளனர்.முச்சகரவண்டி இணுவில் 7 ஆம் கட்டைப் பகுதிக்கு வந்தடைந்த போது, அந்த நாற்சந்திக்கு மூன்று பக்கங்களாலும் இருந்து வந்த முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதின. விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நான்கு பேர் படுகாயமடைந்தனர். எதிரே வந்த முச்சக்கரவண்டியில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் …

Read More »

அசைவப் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி… வலைகளில் அதிகமாகச் சிக்கும் பெரிய இறால்கள்…!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பிரதேசத்தில் இறால் சீசன் ஆரம்பமாகியுள்ளது.உடுத்துறை, வத்திராயன், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஆகிய கடல்பகுதிகளில் தினமும் பெருந்தொகையனான இறால்கள் பிடிக்கப்பட்டு வருகின்றன.வருடந்தோரும் டிசெம்பர் மாதம் முதல் பெப்பரவரி மாதம் வரை இறால் பெருமளவு பிடிக்கபட்டுவது வழக்கமாகும். தற்போது, இப்பகுதிகளில் ஒரு கிலோ இறால் 800 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென் பகுதிகளுக்கு மீன்களை எடுத்துச் செல்லும் மீன் வியாபாரிகள் மீனவர்களிடம் இறால் கொள்வனவு செய்து வருகின்றனர்.

Read More »

வடமராட்சி வானில் பறந்த புஷ்பக விமானங்கள்…!! வியப்பில் உறைந்து போன யாழ் மக்கள்…!!

யாழ். வல்வெட்டித்துறையில் நேற்றைய தினம் மிகச் சிறப்பாக பட்டத் திருவிழா நடைபெற்றுள்ளது.வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்ற இந்த பட்டத் திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பெருமளவானோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது புஸ்பக விமானம், பீரங்கி உள்ளிட்ட வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் வானில் பறந்து அங்கு வந்திருந்த மக்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியிருந்தன.

Read More »