Breaking News
Home / இலங்கை

இலங்கை

இலங்கையை நோக்கிவரும் ‘காஜா’

மத்திய, வங்காள விரிகுடாவில் நிலவிய தாழமுக்க நிலை தற்போது சூறாவளிக் காற்றாக உருவாகி வருகிறது. காஜா என்ற சூறாவளி காங்கேசன்துறையில் இருந்து 1100 கிலோ மீற்றருக்கு அப்பால் இலங்கையின் வடக்கு, கிழக்கு திசையில் இது நிலைகொண்டுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் வெளியிட்ட வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்குள் மேற்குத் திசை நோக்கி நகரக்கூடும். வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் …

Read More »

மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (11) காலை 11 மணியளவில் விஜேராமயில் உள்ள பிரதமரின் இல்லத்தில் வைத்து அவர் அங்கத்துவத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமருடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

பொது தேர்தல் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 33 ஆவது உறுப்புரை 2(இ) உப உறுப்புரையின் கீழ் அதிமேதகு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக இன்று (09) நள்ளிரவு முதல் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவதுடன் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அன்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படவிருப்பதாகவும் அதிமேதகு ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளரினால் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. …

Read More »

நாளை முதல் மழையுடன் கூடிய நிலைமை குறைவடையலாம்

இலங்கைக்கு தென்மேற்காக காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கையை விட்டு விலகிச் சென்று கொண்டுள்ளது. எனவே நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமை நவம்பர் 11ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான …

Read More »

பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பெலிகுல்ஓயா, பலாங்கொட, பகன்குடாவல பிரதேசத்தில் குளிக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இன்று பெலிகுல்ஓயாவில் குளிப்பதற்கு சென்றுள்ளதுடன், அவர்களில் மூவர் நீரில் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து பிரதேசவாசிகளால் மீட்கப்பட்ட மூன்று பேரும் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களே உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கற்கும் மூன்றாம் வருட மாணவர்கள் என்று …

Read More »

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு கவலை வௌியிட்டுள்ள அமெரிக்கா

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கவலையடைந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அது அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உறுதியான பங்காளர் என்ற வகையில், ஸ்திரத்தன்மை, சுபீட்சத்தை உறுதிபடுத்த ஜனநாயக நிறுவனங்கள், நடவடிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்று நாம் கருதிகிறோம் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. .

Read More »

விமான நிலையத்திலிருந்து யாழ் நோக்கிச் சென்ற வான் கோர விபத்து… தாய் ஒருவர் பலி…!!

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் லிந்தவெவ பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் மீது வான் மோதியதில் 27 வயதுடைய தாய் உயிரிழந்துள்ளதாக நொச்சியகம பொலிஸார் குறிப்பிட்டனர்.நேற்று முன்தினம் பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் லிந்தவெவ பிரதேசத்தைச் சேர்ந்த தக்ஸிலா மதுசரனி திஸநாயக்க என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவர். தாயும், மகளும் தங்களின் லிந்தவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள தங்களது வீட்டுக்கு முன்னால் முற்றத்தில் இருக்கும்போது அதிக …

Read More »

2019 சுற்றாடல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை தடையாகக் கருதாது இவ்வாண்டு நிறைவடையும் போது நிறைவுசெய்ய வேண்டிய அபிவிருத்தி பணிகளை முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். பொலன்னறுவை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று (02) முற்பகல் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். நாட்டின் வன அடர்த்தியை அதிகரிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்தும் …

Read More »

வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்பு

களுத்துறை – வடக்கு, வஸ்கடுவ பிரதேசத்தில் வீடொன்றில் கொலை செய்யப்பட்ட வயோதிப பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர தொடர்பு இலக்கத்துக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் களுத்துறை – வடக்கு, பொலிஸாரால் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 80 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே உயிரிழந்திருப்பதுடன், அவர் தனிமையில் வீட்டில் இருந்த போது கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணமோ கொலைச் சந்தேகநபரே இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் …

Read More »

வெளிநாட்டில் நடந்த கோர விபத்தில் இலங்கை இளைஞன் பரிதாபமாகப் பலி…!!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் இலங்கையை சேர்ந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.அவுஸ்திரேலியாவின் Clayton பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த காமில் யுசுப் என்ற 22 வயதான இளைஞன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மோட்டர் சைக்கிள் பிரியரான காமில் யுசுப்இ நீண்ட காலத்திற்கு பின்னர் மோட்டர் சைக்கிளில் பயணித்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.காமில் யுசுப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார்.கடந்த …

Read More »