Breaking News
Home / latest-update / 100 ஆண்டுகளில் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று

100 ஆண்டுகளில் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று

100 ஆண்டுகளில் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று (27) இடம்பெறவுள்ளதாக, கொழும்பு பல்கலைகழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாக இது அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்த முழுமையான சந்திர கிரகணம் 27 ஆம் திகதி இரவு முதல் 28 ஆம் திகதி அதிகாலை வரை சுமார் 06 மணி நேரங்களும் 14 நிமிடங்களும் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி இரவு 10.45 மணியளவில் இருந்து, மறுநாள் அதிகாலை வரை சந்திர கிரகணம் இடம்பெறும்.

இந்த சந்திர கிரகணத்தின் பின்னர் இலங்கையருக்கு 2025 ஆம் வரையில் இது போன்ற சந்திர கிரகணத்தை பார்பதற்கான வாய்ப்பு கிடைக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

நன்றாக தூங்கியும் சோர்வாய் உணர்ந்தால் இந்த நோயாக கூட இருக்கலாம்

இரவு நேரத்தில் நன்றாக தூங்கி எழுவது உங்களை சுறுசுப்புடனும், புத்துணர்வுடனும் மற்றும் ஆரோக்கியமாக உணர செய்யும். அப்படி நீங்கள் சரியாக …