Breaking News
Home / latest-update / வீட்டிலிருந்தோரை கத்தி முனையில் அச்சுறுத்தி பயங்கரக் கொள்ளை……!! அதிகாலை வேளையில் நீர்வேலியில் பயங்கரம்…..!!

வீட்டிலிருந்தோரை கத்தி முனையில் அச்சுறுத்தி பயங்கரக் கொள்ளை……!! அதிகாலை வேளையில் நீர்வேலியில் பயங்கரம்…..!!

பருத்­தித்­துறை வீதி­யில் நீர்­வேலி தெற்­கில், வலி.கிழக்­குப் பிர­தேச சபைக்கு அரு­கி­லுள்ள வீட்­டுக்­குள் புகுந்த கொள்­ளை­யர்­கள் வீட்­டி­லி­ருந்­தோரை அச்­சு­றுத்தி 30 பவுண் நகை மற்­றும் 15 ஆயி­ரம் ரூபா பணத்­தைக் கொள்­ளை­ய­டித்­துள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று அதி­காலை ஒரு மணி­ய­ள­வில் இடம்பெற்றுள்ளது.குடும்­பத் தலை­வர் சம்­ப­வம் இடம்­பெற்­ற­போது வீட்­டில் இருக்­க­வில்லை. அவ­ரது மனைவி, மகள், பெரிய தாய் ஆகி­யோரே இருந்­துள்­ள­னர்.

இரவு 1 மணி­ய­ள­வில் புகைக் கூட்­டின் ஓட்டை கழற்றி அத­னூ­டா­கக் கொள்­ளை­யன் ஒரு­வன் வீட்­டுக்­குள் நுழைந்­துள்­ளான். வீட்­டின் கதவை அந்­தக் கொள்­ளை­யன் திறந்­து­விட ஏனைய மூவ­ரும் வீட்­டுக்­குள் நுழைந்­துள்­ள­னர்.சத்­தம் கேட்டு வீட்­டி­லி­ருந்­த­வர்­கள் விழித்­தெ­ழுந்­துள்­ள­னர். 4 கொள்­ளை­யர்­க­ளும், வீட்­டி­லி­ருந்த பெண்­கள் மூவ­ரை­யும் அச்­சு­றுத்தி ஓரி­டத்­தில் இருத்­தி­யுள்­ள­னர். இரண்டு கொள்­ளை­யர்­கள் அவர்­களை கண்­கா­ணிக்க, எஞ்­சிய இரண்டு பேரும் வீட்டை சல்­லடை போட்­டுத் தேடி­யுள்­ள­னர்.

சுமார் அரை மணி நேரம் தேடு­தல் நடத்தி 30 பவுண் நகை, 15 ஆயி­ரம் ரூபா பணம், அலை­பேசி என்­ப­வற்­றைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ள­னர். கொள்­ளை­யர்­கள் 4 பேரும் முகத்தை மூடி­யி­ருந்­த­து­டன், அவர்­கள் 30 வய­துக்கு உட்­பட்­ட­வர்­க­ளாக இருக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கின்­றது.

வீட்­டைச் சுற்றி தோட்­டங்­க­ளாக இருந்­த­தால், அய­ல­வர்­கள் எவ­ரும் உடனே உத­விக்கு வர­வில்லை. கொள்­ளை­ய­டித்­துச் சென்ற அலை­பே­சியை வாழைத் தோட்­டத்­துக்­குள் வீசிச் சென்­றுள்­ள­னர்.சம்­ப­வம் தொடர்­பில் கோப்­பாய் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­கள் பத்து நிமி­டங்­க­ளில் சம்­பவ இடத்­துக்கு வந்­துள்­ள­னர். சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன எனவும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

Check Also

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #AssamHospital #Childdeath கவுகாத்தி: …