Breaking News
Home / latest-update / யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் 5 பாகை செல்சியஸால் வெப்பநிலை அதிகரிப்பு

யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் 5 பாகை செல்சியஸால் வெப்பநிலை அதிகரிப்பு

நிலவும் வறட்சியான காலநிலையுடன் சில பிரதேசங்களில் வழமையான வெப்பநிலையை விட 5 பாகை செல்சியஸால் வெப்பநிலை அதிகரித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குருநாகல், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் வெப்பநிலை 5 பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளது.

மேலும், கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் வெப்பநிலை 2.4 பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வறட்சி காரணமாக 17 மாவட்டங்களை சேர்ந்த 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Check Also

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #AssamHospital #Childdeath கவுகாத்தி: …