Breaking News
Home / latest-update / பெருமளவு கஞ்சாவுடன் மூவர் காங்கேசன் கடலில் அதிரடியாக கைது…!!

பெருமளவு கஞ்சாவுடன் மூவர் காங்கேசன் கடலில் அதிரடியாக கைது…!!

பெருமளவு கஞ்சா போதைப்பொருளைக் கடத்த முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று சந்தேகிகள் பருத்தித்துறைக் கடலில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக கான்கேசன்துறை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் சந்தேகத்துக்குகிடமாக மிதந்த படகு ஒன்றை கடற்படையினர் வழிமறித்துச் சோதனையிட்டபோது, அதனுள்ளிருந்து கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது.

அதனை கடத்த முற்பட்டனர் என்ற சந்தேகத்தின்பேரில் மூவர் கைது செய்யப்பட்டனர்.சந்தேகநபர்கள் மூவரும் பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.விசாரணைகளின் பின்னர் அவர்கள் மூவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

Check Also

நன்றாக தூங்கியும் சோர்வாய் உணர்ந்தால் இந்த நோயாக கூட இருக்கலாம்

இரவு நேரத்தில் நன்றாக தூங்கி எழுவது உங்களை சுறுசுப்புடனும், புத்துணர்வுடனும் மற்றும் ஆரோக்கியமாக உணர செய்யும். அப்படி நீங்கள் சரியாக …