Breaking News
Home / latest-update / நயன்தாரா மகளாக நடித்த பிரபல காமெடி நடிகரின் மகள்

நயன்தாரா மகளாக நடித்த பிரபல காமெடி நடிகரின் மகள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்தில் நடித்த நயன்தாரா உள்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த சுட்டிக்குழந்தை மானஸ்வி அனைவரின் கவனத்தை பெற்றார். குறிப்பாக போலீஸ்காரராக நடித்தவருடன் இந்த குழந்தை பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் பலத்த கைதட்டல் கிடைத்தது.

இந்த நிலையில் இந்த சுட்டிக்குழந்தை பிரபல காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் என தெரியவந்துள்ளது. மேலும் அரவிந்தசாமி நடித்து வரும் ‘சதுரங்க வேட்டை 2’ படத்தில் இந்த குழந்தை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கொட்டாச்சி ‘காவியத்தலைவன், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி உள்பட பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் என்பது தெரிந்ததே.

Check Also

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #AssamHospital #Childdeath கவுகாத்தி: …