Breaking News
Home / latest-update / தென்னிந்தியாவின் இரண்டு மிகப் பெரிய திரையுலகப் பிரபலங்கள் வெகுவிரைவில் இலங்கையில்…..!!இன்ப அதிர்ச்சியில் இலங்கை ரசிகர்கள்….!

தென்னிந்தியாவின் இரண்டு மிகப் பெரிய திரையுலகப் பிரபலங்கள் வெகுவிரைவில் இலங்கையில்…..!!இன்ப அதிர்ச்சியில் இலங்கை ரசிகர்கள்….!

ஏழைகளின் இதய தெய்வம் என அன்போடு அழைக்கப்படும் எம்.ஜி.ஆர் அவர்களின் 102 வது ஜனன தினத்தை முன்னிட்டு அவரின் சொந்த பிறப்பிடமான இலங்கையின் கண்டியில் மிக பிரமாண்டமான முறையில், ஜனன தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட இலங்கையின் முக்கிய கலைஞர்கள் கலந்துக்கொள்ளப்போகின்ற இந்நிகழ்வு மிக பிரமாண்டமான முறையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ம் திகதி இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த அறிய நிகழ்வில் உலகநாயகன் கமல் மற்றும் வடிவேல் அவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.இவர்கள் இருவரும் இதில் நிச்சியம் பங்கேற்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவருடன் நடிகர் சரவணனும் பங்கேற்பதாக தகவல்கள் வந்துள்ளது.

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியாக இந்நிகழ்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் இலங்கையில் திறமைப்படுத்த கலைஞர்களும் இந்நிகழ்வில் கலந்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன.

ஆகவே, திரண்டுவாருங்கள் ரசிகர்களே..இலங்கை மண்ணில் சினிமா இமையங்களின் வருகையுடன்….

Check Also

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #AssamHospital #Childdeath கவுகாத்தி: …