Breaking News
Home / latest-update / ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்.

ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்.

ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேர (itsunori ondera) 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார்.

நேற்று (20) இரவு 10.15 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து சந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 126 என்ற விமானத்திலேயே அவரும், 19 பேர் அடங்கிய அவருடைய குழுவும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த குழுவினர் நாளை (22) ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு அரசியல்வாதிகளை சந்திக்க உள்ளனர்.

குறித்த குழுவினரை வரவேற்பதற்காக ஜப்பான் தூதரகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

Check Also

எப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்

மருத்துவ மொழியில் அலோபிசயா என்பது வழுக்கையை குறிக்கும் ஒரு சொல் என்பது பலரும் அறிந்ததாகும். எந்த மொழியில் கூறினாலும் நடு …