Breaking News
Home / latest-update / கிரிக்கெட் பேட்டால் டோனிக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

கிரிக்கெட் பேட்டால் டோனிக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

ஆசிய கிண்ண தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் டோனிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

பிரபல பேட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பார்டன் நிறுவனம் டோனி, சச்சின் ஆகியோருடன் பேட்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

குணால் ஷர்மா என்பவர் தான் ஸ்பார்டன் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.

அதே சமயம் ஸ்பார்டன் நிறுவனத்தின் இணை உரிமையாளர் டோனி தான் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்பார்டன் நிறுவனம் வீரர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை உரிய நேரத்தில் வழங்குவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இங்கிலாந்து வீரர் இயான் மார்கன், மிட்செல் ஜான்சன், ஜோ பர்ன்ஸ், கிறிஸ் கெய்ல், கமின் கான் ஆகியோர் ஸ்பார்டன் பேட்களையே பயன்படுத்தி வரும் நிலையில் அவர்களுக்கான தொகை சரியான நேரத்தில் செல்லவில்லை என கூறப்படுகிறது.

வீரர்களுக்கு பணப்பிரச்சனை தொடரும் நிலையில் டோனி இன்னும் ஸ்பார்டன் நிறுவன பேட்களையே உபயோகப்படுத்துகிறார்.

ஏற்கனவே நிறுவனத்தில் இணை உரிமையாளர் டோனி என கூறப்படும் நிலையில் இந்த பணப்பிரசனையிலும் அவர் இன்னும் ஸ்டார்பன் நிறுவனத்துக்கு ஆதரவாக அந்த ஸ்டிக்கரை பயன்படுத்துவது அவருக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது.

Check Also

நன்றாக தூங்கியும் சோர்வாய் உணர்ந்தால் இந்த நோயாக கூட இருக்கலாம்

இரவு நேரத்தில் நன்றாக தூங்கி எழுவது உங்களை சுறுசுப்புடனும், புத்துணர்வுடனும் மற்றும் ஆரோக்கியமாக உணர செய்யும். அப்படி நீங்கள் சரியாக …