Breaking News
Home / latest-update / ஏழு தமிழர்களின் விடுதலையில் இன்று முக்கிய முடிவு….!! 24 மணித்தியாலத்திற்குள் விடுதலையாகும் ஏழு ஆயுட் கைதிகள்…..!!

ஏழு தமிழர்களின் விடுதலையில் இன்று முக்கிய முடிவு….!! 24 மணித்தியாலத்திற்குள் விடுதலையாகும் ஏழு ஆயுட் கைதிகள்…..!!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துவரும் ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பான முடிவை தமிழக அரசே எடுக்க அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு தற்போது தமிழக அரசில் பரபரப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வரலாற்றில் அதிக வருடம் சிறைவாசம் அனுபவித்துவரும் சாந்தன், நளினி, மற்றும் முருகன் உள்ளிட்ட குறித்த ஏழு தமிழர்களின் விடுதலையை எதிர்நோக்கி, சமூக மற்றும் அரசியல் நிலவரங்களைத்தாண்டி, பல்வேறு தரப்பினரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல கோரிக்கைகளையும் அழுத்தங்களையும் பிராயோகித்து வந்தனர்.

தற்போது வெளியாகி இருக்கக்கூடிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசின் முடிவை நோக்கி அனைவரையும் திசைத்திருப்பியுள்ளது.

மேலும், குறித்த ஏழு தமிழர்களின் விடுதலை எக்காலத்தில் உறுதிப்படுத்தப்படவுள்ளது, உச்ச நீதிமன்றின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசுக்கு உள்ள சவால்களை எவ்வாறு சாதிக்கப்போகின்றது என்பது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த ஏழு தமிழர்களின் விடுதலை எக்காலத்தில் உறுதிப்படுத்தப்படவுள்ளது, உச்ச நீதிமன்றின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசுக்கு உள்ள சவால்களை எவ்வாறு சாதிக்கப்போகின்றது என்பது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அமைச்சரவை கூட்டத்தில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் நளினி, பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக இன்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 வருடங்களுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் சிறையில் உள்ளனர். சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் அவர்களை மாநில அரசு விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில் சில தினங்கள் முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. மாநில அரசு தனக்கு உள்ள சட்ட அதிகாரத்தின்படி, 7 தமிழர்களை விடுதலை செய்ய முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து வேலூர் சிறையில் உள்ள ஏழு பேரும் நேற்று முன்தினம் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று புதிதாக ஒரு கோரிக்கை மனுவை எழுதி அதை தங்களது வழக்கறிஞர் புகழேந்தி மூலமாக அரசுக்கு கொடுத்தனுப்பினார். அந்தக் கடிதம் நேற்று அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.

விடுமுறை தினத்தில் விடுதலை முடிவு இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையான இன்று, விடுமுறை தினம் என்ற போதிலும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை இன்று கூடுகிறது.

அமைச்சரவையின் அஜெண்டா என்ன என்பது குறித்து தெரியாவிட்டாலும், 7 தமிழர் விடுதலைதான் இதன் நோக்கம் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் இதை உறுதி செய்தார்.

உறுதி செய்த அமைச்சர் இன்று அமைச்சரவை கூட்டத்தில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று அவர் தனது பேட்டியில் தெரிவித்தார். இதன்மூலம் என்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

Check Also

நன்றாக தூங்கியும் சோர்வாய் உணர்ந்தால் இந்த நோயாக கூட இருக்கலாம்

இரவு நேரத்தில் நன்றாக தூங்கி எழுவது உங்களை சுறுசுப்புடனும், புத்துணர்வுடனும் மற்றும் ஆரோக்கியமாக உணர செய்யும். அப்படி நீங்கள் சரியாக …