Breaking News
Home / latest-update / எப்ப பார்த்தாலும் சண்டையா? இது தாங்க காரணம்…

எப்ப பார்த்தாலும் சண்டையா? இது தாங்க காரணம்…

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரையும் எளிதில் இணைக்கும் மற்றும் உலகத்தையே உங்கள் கைகளில் தவழவிடும் தொழிநுட்பத்தைப் புகழாமல் இருக்கமுடியாது. ஆனால் , வெளியில் நன்றாகத் தோன்றும் இந்த தொழில்நுட்பங்களினுள்ளே ஒளிந்திருக்கும் பாதிப்புகளைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு ? உடல் ரீதியாக பாதிக்கப்படுவதைத் தவிர்த்து , அது எப்படி நம் உறவுகளைப் பாதிக்கிறது என்பதைப் பார்க்கலாம் இங்கே.

விதவிதமான கெஜெட்டுகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களால் சூழப்பட்டுள்ள உலகத்தில் வாழ்கிறோம் நாம்.இந்த அமைப்புகள் நம்மை பல மக்களுடன் விர்ச்சுவலாக தொடர்பில் வைத்திருக்க உதவுகின்றன.அதாவது நேரடியாக இல்லாமல் , ஒரு மாய உலகில் நம்மை இணைத்து வைக்க இந்த தொழில் நுட்பங்கள் உதவுகின்றன. இன்றைய காலகட்டத்தில் மாய உலகில் சஞ்சரித்து உறவை வளர்க்கும் நாம் , உடல் ரீதியான உறவு ஏற்படும் போது மிகவும் பாதிக்கப்படுகிறோம். இதற்குக் காரணம் மோசமான இந்த கம்யூனிகேஷன் தொழில் நுட்பங்களேயாகும். தொழில்நுட்பம் உறவுகளை எப்படி அழிக்கிறது என்பதைக் காணலாம் வாருங்கள்!!!

வீடியோ விளையாட்டு
உங்கள் பார்ட்னர் அதிக நேரம் வீடியோ கேம் விளையாடுவதில் செலவழித்தால், அது ஒரு எச்சரிக்கை அறிகுறி. ஆய்வுகளின்படி, வாழ்கை ஜோடிகள் வீடியோ விளையாட்டுகளில் அதிகநேரத்தையும் மற்றும் தங்களுக்குள்ளே குறைவான நேரத்தையும் அதிக நேரம் செலவழிக்கின்றார்கள்.பெண்களும் கூட நாளடைவில் வீடியோ கேம்களில் அடிமையாகி விடுகிறார்கள், அதனால் தினமும் இந்த மாதிரியான விளையாட்டுகளில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இதிலிருந்து தப்பிக்க நீங்களும் உங்கள் லைப் பார்ட்னரும் சேர்ந்து ஒரு பூங்காவில் நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். ஒரு சிறிய பிக்னிக் ஏற்பாடு செய்து நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசுங்கள். இந்த நேரங்களில் உங்களின் அனைத்து கெஜெட்டுகள் மற்றும் கம்யூனிகேஷன் சாதனங்களை ஒதுக்கி வையுங்கள். இந்த முறையைப் பின்பற்றுவதால் இந்த டிவைஸ்களின் போதை உங்களை விட்டு சிறிது சிறிதாக விலகும் மற்றும் உங்கள் இருவருக்குமுள்ள உறவு மேம்படும்.

ஸ்மார்ட்போன்
நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி இருக்கிறீர்களா?. உங்கள் லைப் பார்ட்னர் தனது தொலைபேசியில் அதிக நேரத்தைச் செலவிடுகிறாரா? தொலைபேசிப் போதை இந்த நாட்களில் அனைவருக்கும் உண்டாகியுள்ள ஒரு பொதுவான விஷயம். பலர் இந்தப் பழக்கத்தை விட முயற்சி செய்கிறார்கள், ஆனால் அது அவ்வளவு எளிதானது இல்லை. ஸ்மார்ட்போன்கள் நமக்கு தினசரி பயன்படும், மற்றும் இளைய தலைமுறையின் இன்றியமையா தேவையாகவும் உள்ளது. ஆனால் அதற்கு அடிமையாகிவிட்டால், நம் உறவுகளை அது அழிக்கிறது.

ஒரு வாழ்க்கை ஜோடி, தங்கள் அதிக நேரத்தை ஒன்றாகச் செலவிடுகிறது. எதற்கு தெரியுமா? ஒன்றாக அமர்ந்து தங்களின் மொபைலை தனித்தனியாக உபயோகப்படுத்த மட்டுமே. இறுதியில் இது உறவுகளின் செயல்திறனைக் குறைக்கிறது மற்றும் உறவுகளின் முடிவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ஆன்லைன் ஃப்ளிர்ட்டிங்
ஆன்லைன் ஃப்ளிர்ட்டிங் உறவுக்கு தீங்கு விளைவிக்கிறது. சமூக ஊடகங்கள்,உறவுகளை அழிக்கும் விர்ச்சுவலான புற்றுநோயாகும். உங்களை மாயை உலகத்தில் சஞ்சரிக்க வைத்து உங்களை கிட்டத்தட்ட விழுங்கிவிடுகிறது. உங்கள் பார்ட்னர் உங்களுடன் பேச விரும்புகிற நேரத்தில், நீங்கள் ஆன்லைனில் தொடர்பில் உள்ளவரிடம் பேசுகிறீர்கள் மற்றும் அவரை ஃப்ளிர்ட் செய்ய உங்கள் நேரத்தைச் செலவிடுகிறீர்கள். இதில் காமெடி என்னவெனில் , உங்கள் துணையுடன் நேரில் பேச விருப்பம் காட்டாத நீங்கள் கணினித் திரையில் தோன்றும் எழுத்துக்களை பெரிதும் விரும்புகிறீர்கள். ஆன்லைனில் ஃப்ளிர்ட் செய்வது நேரத்தை விரயமாக்கும் மற்றும் புதிய நண்பர்களை உருவாக்குவதற்கான ஒரு நல்ல வழியாகும். இருப்பினும், வலுவான மற்றும் மகிழ்ச்சியான உறவுகளை அழிப்பதிலே நம்பர் 1 ஆக உள்ளது இந்த ஆன்லைன் ஃப்ளிர்ட்டிங்.

சமூக ஊடகங்கள்
சமூக ஊடகங்களில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நிறைய செய்திகளை பகிர்ந்துகொள்கிறீர்கள். சமூக ஊடகங்களில் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தையும் பகிர்ந்து கொள்ளல் இன்றைய காலத்தில் ஒரு ட்ரெண்ட்டாக மாறிவிட்டது. ஆனால் உங்கள் உறவின் எந்தவொரு நெருக்கமான தகவல்களையும் வெளியிடும் முன், அதில் சம்பந்தப்பட்டவர்கள் அதை எப்படி உணருவார்கள் என்று யோசியுங்கள். உறவில் பிரைவசி கொண்டிருப்பது மிக முக்கியம், ஆனால் சமூக ஊடகங்களுக்குள் வரும்போது ​​நாம் ஒவ்வொரு விவரத்தையும் பகிர்ந்து கொள்கிறோம். இந்தப் பகிர்வு மற்றவர்களுக்கு நம் வாழ்வின் முழுமையான கண்ணோட்டத்தை அளிக்கிறது, இதுவே உறவுகளுக்கிடையே நிறைய சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

உங்கள் சண்டைகளின் விவரங்களைச் சேர் செய்வதை அறவே தவிர்க்கவும். நீண்ட மற்றும் மகிழ்ச்சியான உறவைக் கொண்டிருக்க உங்கள் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க விஷயங்களைத் பாதுகாப்பான முறையில் வைத்திருங்கள்.

நெருக்கம்
தொழில்நுட்பம் உங்கள் நெருக்கத்தை பலி வாங்குகிறது. உங்கள் பார்ட்னர் உங்களிடம் அன்பு காட்ட விரும்பும் நேரத்தில் நீங்கள் உங்கள் மடிக்கணினியை பயன்படுத்துவதில் பிஸியாக உள்ளீர்கள். இந்த மாதிரியான நெருக்கக் குறைவு லைப் பார்ட்னர்களுக்கு இடையிலான உடல் ரீதியான தொடர்பை இழக்க வழி வகுக்கிறது.

மன அழுத்தம்
சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் கடுமையான பயன்பாடு மக்கள் மனநலத்தின் மீது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் உண்டாகும் பெரும்பாலான பிரச்னைகளால் மன அழுத்தம் ஏடுபடுகிறது. அதன்காரணமாக, வெளியில் சென்று நண்பர்களுடனோ அல்லது வீட்டில் பெற்றோர் மற்றும் குழந்தைகளிடமோ காட்டி, இனனும் கூடுதலாக, உறவுகளுக்கு இடையே தர்ம சங்கடங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம்.

நேரத்தை செலவழித்தல்
தொழில்நுட்பம் உங்களுக்குப் பிடித்தவைகளுடன் குறைந்த நேரத்தைச் செலவிட நிர்பந்திக்கிறது. பலசமயங்களில் நாம்,உண்மையான வாழ்க்கையில் நாம் பார்க்க வேண்டியதை மறந்துவிட்டு உலகம் என்ன விரும்புகிறதோ அதைக் காணுகிறோம். உங்கள் பார்ட்னரின் அழகான அன்பு மற்றும் நீங்கள் இருவரும் இணைந்திருப்பதற்கான வாய்ப்புகளை உங்கள் தொழில்நுட்பப்பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. இவைகள் அனைத்தும் உறவுகளில் விரிசல் உண்டாக்கும் தொழில்நுட்பத்தின் முக்கிய விளைவுகளாகும். நாம் செய்யவேண்டியதெல்லாம், நம் உறவுகளின் மேம்பாட்டிற்காக இந்த மாதிரியான மாய வலைக்குள் சிக்காமல் இருப்பதேயாகும்.

எனவே உங்கள் பொன்னான நேரத்தை குடும்பத்துடனும், லைப் பார்ட்னருடனும் செலவிடுங்கள். ஸ்மார்ட் போனை தேவையில்லாமல் நோண்டுவதை உடனே நிறுத்துங்கள்

Check Also

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #AssamHospital #Childdeath கவுகாத்தி: …