Breaking News
Home / latest-update / உத்தியோகபூர்வ மக்கள் பணி நடமாடும் சேவை கோப்பாயில் இன்று

உத்தியோகபூர்வ மக்கள் பணி நடமாடும் சேவை கோப்பாயில் இன்று

இன்றைய தினம் யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் உத்தியோகபூர்வ பணி நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரிலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் கீழும், உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தனவின் வழிநடத்தலிலும் இந்த சேவைகள் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இடம்பெறுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று கோப்பாய் கிறிஸ்த்தவ கல்லூரியில் காலை 8.30க்கு இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.இதன் போது, தேசிய அடையாள அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், திருமண சான்றிதழ்கள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படவுள்ளன.

இந்த சேவைகள் நாளை தெல்லிப்பழை யுனியன் கல்லூரியிலும், நாளை மறுதினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் எதிர்வரும் 17ம் திகதி வேலைணை மத்திய மகா வித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

Check Also

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #AssamHospital #Childdeath கவுகாத்தி: …