Breaking News
Home / latest-update / இரண்டு தலைகளுடன் பிறந்த கன்று குட்டி…

இரண்டு தலைகளுடன் பிறந்த கன்று குட்டி…

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் கிராமத்தில் பசு மாடு ஒன்று அதிசய பசுக்கன்று ஒன்றை நேற்று (23) பகல் 11 மணி அளவில் ஈன்றுள்ளது.

பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள ஜெயராகுலன் ஜெயமலர் என்பவரது வீட்டிலேயே நடந்துள்ளது.

எவ்வாறாயினும் அந்த அதிசய கன்றும் அதனை ஈன்ற தாய்ப் பசுவும் இன்று மாலை 3 மணிவரை நலமாக இருந்ததாகவும் மாலை 3 மணி அளவில் இரண்டு தலைகளுடன் பிறந்த கன்று இறந்துவிட்டதாக குறித்த பசுவின் உரிமையாளர் எமக்குத் தெரிவித்தார்.

அபூர்வமாக நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற மக்கள் குறித்த கன்றினை பார்ப்பதற்காக படையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #AssamHospital #Childdeath கவுகாத்தி: …