Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (11-10-2018)

இன்றைய ராசி பலன் (11-10-2018)

மேஷம்
அக்டோபர் 11, 2018

இன்று குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். எதிர்ப்புகள் விலகும். தொழில் சார்ந்த முன்னேற்றம் பாராட்டும் வகையில் இருக்கும்.

ரிஷபம்
அக்டோபர் 11, 2018

இன்று தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றமாக இருக்கும். வளர்ப்பு பிராணிகளால் மகிழ்ச்சியடைவீர்கள். குழந்தைகளால் பெருமைப்படும் வகையில் அவர்கள் செயல்பாடு இருக்கும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். மேலதிகாரிகளின் அனுசரணை மன நிம்மதி தரும்.

மிதுனம்
அக்டோபர் 11, 2018

இன்று உங்கள் சிரமங்கள் குறையும். சுகசவுக்கியம் மிகுந்திருக்கும். விருந்தினர் வருகை இல்லம் சிறக்கும். சுகபோஜனம் உறவினர்களுடன் சந்தோஷமான சூழல் இருக்கும். செய்யும் தொழிலில் மேலதிகாரிகளின் பாராட்டும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்கும்.

கடகம்
அக்டோபர் 11, 2018

இன்று உங்கள் செயல்பாடுகளில் புத்திசாலித்தனம் மிகுந்திருக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். முன்கோபம் வரும். தவிர்ப்பது நலம். குடும்பப்பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.

சிம்மம்
அக்டோபர் 11, 2018

இன்று முற்பகுதியில் சிரமங்கள் அலைச்சல் இருந்தாலும், பிற்பகுதியில் சுகவிருத்தி, நோய் தீருதல், எதிர்ப்பு விலகல் என நற்பலன்கள் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும்.

கன்னி
அக்டோபர் 11, 2018

இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலை தாராளமாக இருக்கும். சுகபோகம் மிகுந்திருக்கும். குழந்தை பராமரிப்பு சிரமங்கள் இருக்கும். குடும்பப்பணிகளில் சிரமம் இருக்கும். அக்கம்பக்கத்தில் கவனம் தேவை. ஆன்மிக ஈடுபாடு மன நிம்மதி தரும்.

துலாம்
அக்டோபர் 11, 2018

இன்று உங்களுக்கு அத்தியாவசியத்தேவைகளில் நெருக்கடி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தேக ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்னைகள் வரும். செய்யும் தொழிலில் பாராட்டு பெறும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்கும்.

விருச்சிகம்
அக்டோபர் 11, 2018

சிக்கலான பிரச்னையில் இன்று நீங்கள் எடுக்கும் முடிவு வெற்றி பெறும். முன்கோபத்தினால் உங்கள் நெருக்கமானவர்களின் மன வருத்தம் உங்களுக்கு மனசஞ்சலம் தரும். புதிய விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். நீண்ட நாள் குறை இன்று தீரும்.

தனுசு
அக்டோபர் 11, 2018

இன்று உங்கள் செயல்பாடுகளில் தடுமாற்றம் இருக்கும். வீண் பயம் மனசஞ்சலம் தரும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் பாராட்டு பெறும் வகையில் இருக்கும்.

மகரம்
அக்டோபர் 11, 2018

இன்று எதிர்பாராத செலவுகள் சிரமம் தரும். தொழில் சார்ந்த விஷயங்கள் சுமாராகவே இருக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாதீர்கள். பிரச்னை வரும்.

கும்பம்
அக்டோபர் 11, 2018

உங்கள் விடாமுயற்சிக்கு இன்று நற்பலன்கள் கிட்டும். தொழில் சார்ந்த விஷயங்கள் முன்னேற்றமாக இருக்கும். வழக்குகளில் அனுகூலமான சூழ்நிலை வரும். மகன், மகள் மூலம் சந்தோஷமான மனநிலை வரும்.

மீனம்
அக்டோபர் 11, 2018

இன்று வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். முக்கியமான விஷயத்தில் காரியத்தடை வரும். பணவரவுகள் உங்கள் சிரமங்கள் குறையும் வகையில் இருக்கும். சுகபோஜனம் திருப்தி தரும் வகையில் இருக்கும்.

Check Also

எப்படிப்பட்ட வழுக்கையிலும் முடி வளரச் செய்யும் அற்புத எண்ணெய்கள்… வீட்டிலே தயாரிக்கலாம்

மருத்துவ மொழியில் அலோபிசயா என்பது வழுக்கையை குறிக்கும் ஒரு சொல் என்பது பலரும் அறிந்ததாகும். எந்த மொழியில் கூறினாலும் நடு …