Breaking News
Home / latest-update / அழகு | கவிதை

அழகு | கவிதை

துள்ளி விளையாடும் புலிக்குட்டி அழகு🐅🐯
அது சீறிப் பாய்ந்து தாக்கும் வரை 🐯

சிங்கத்தின் பிடரி அழகு🦁அது நம்மை குதறி அழிக்கும் வரை🦁

படமெடுத்தாடும் பாம்பழகு🐍
அது நம்மை தீண்டும் வரை🐉

எரியும் விளக்கின் ஜோதி அழகு🔥
அது தொட்டு நம்மை சுடும் வரை🔥

அலையடிக்கும் கடல் அழகு🌈
அது சுனாமியாக சுருட்டும் வரை❄

கடனும் கூட வாழ்விற்கழகு👑
அது திருப்பி கேட்கப் படாத வரை❄

கள்ளும் கூட பாலின் அழகு🌴
அது போதை ஏற்றாதவரை🌴

மீன் குழம்பின் சுவை அழகு🐟🐟
முள் தொண்டையில் குத்தாதவரை🐟

பெண்ணினம் எப்போதும் அழகு🌹
செல்லமாய் கொஞ்ச குழந்தையில்
அழகு👭

ஆசையாய் அணைக்க குமரியாய் அழகு👩‍❤‍💋‍👩

சேய் சுமக்கும் தாய்மையில் அழகு💆

முதுமையிலும் அனுபவத்தில் அழகு👱

அகத்திலும் அழகு★முகத்திலும் அழகு

 

 

Check Also

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி – விசாரணைக்கு உத்தரவு

அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #AssamHospital #Childdeath கவுகாத்தி: …